/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நன்செய் இடையாறு ராஜா சுவாமிக்கு 18 வாசனை திரவியங்களால் அபிஷேகம்
/
நன்செய் இடையாறு ராஜா சுவாமிக்கு 18 வாசனை திரவியங்களால் அபிஷேகம்
நன்செய் இடையாறு ராஜா சுவாமிக்கு 18 வாசனை திரவியங்களால் அபிஷேகம்
நன்செய் இடையாறு ராஜா சுவாமிக்கு 18 வாசனை திரவியங்களால் அபிஷேகம்
ADDED : ஜன 02, 2024 11:47 AM
ப.வேலுார் :ஆங்கில புத்தாண்டையொட்டி, நேற்று ப.வேலுார் அருகே, நன்செய் இடையாறு ராஜா சுவாமி கோவிலில் உள்ள ராஜா சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பின், ராஜா சுவாமி முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதேபோல், கபிலர்மலை பாலசுப்பிரமணியசுவாமி கோவில், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர், பரமத்தி அருகே உள்ள பிராந்தகத்தில், 34.5 அடி உயரமுள்ள ஆறுமுகக்கடவுள், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனுார் அருகே உள்ள பச்சமலை முருகன், அனிச்சம்பாளையத்தில் வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியர், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனியாண்டவர், நன்செய்இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பாலப்பட்டி கதிர்மலை ஸ்கந்தசாமி மற்றும் கந்தம்பாளையம் அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

