ADDED : ஆக 06, 2025 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, வெடியரசம்பாளையம் பகுதியில், கடந்த, 2022ல், வீட்டில் தனியாக இருந்த வயதான தம்பதியை கட்டிப்போட்டு, 30 லட்சம் ரூபாயை சிலர் கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட கோபாலகிருஷ்ணன், 34, ஜாமினில் வெளியே வந்தார். அதன்பின், மீண்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துவந்தார்.
இதனால், பள்ளிப்பாளையம் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், கோபாலகிருஷ்ணன், ராமநாதபுரம் அருகே, கமுதி பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற பள்ளிப்பாளையம் போலீசார், கோபால கிருஷ்ணனை கைது செய்து, பள்ளிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர்.