/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தலைமறைவு குற்றவாளி கோவையில் சிக்கினார்
/
தலைமறைவு குற்றவாளி கோவையில் சிக்கினார்
ADDED : ஏப் 27, 2025 04:34 AM
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், வழிப்பறி வழக்கில் ஜாமினில் வெளியே வந்தவர், 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். அவரை, நேற்று போலீசார் கோவையில் கைது செய்தனர்.
இதுகுறித்து, ஏ.டி.எஸ்.பி. சண்முகம், இன்ஸ்பெக்டர் தவமணி கூறியதாவது:
குமாரபாளையத்தில், 2012ல் வழிப்பறியில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர், திருப்பத்துார் மாவட்டம், கோட்டான்-கல்லுார், பெரம்பட்டு பகுதியை சேர்ந்த மாது, 47; இவர், 2015ல் ஜாமினில் வெளியே வந்தவர், 10 ஆண்டுகளாக ஆஜராகமால் தலைமறைவாக இருந்து வந்தார்.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி, தனிப்படை போலீசார், மாதுவை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று தனிப்படை போலீசார் கோவையில் கைது செய்தனர்.