அம்மிக்கல்லை போட்டு கொலை தப்பி ஓடியவர் சிறையில் அடைப்பு
அம்மிக்கல்லை போட்டு கொலை தப்பி ஓடியவர் சிறையில் அடைப்பு
ADDED : செப் 24, 2026 06:25 AM
எருமப்பட்டி:நாமக்கல்
மாவட்டம், பரமத்தி அருகே, ஜங்கமநாய்க்கன்பட்டியை சேர்ந்தவர்
கூலித்தொழிலாளி சிவா, 22; இவரது நண்பர், எருமப்பட்டி,
முட்டாஞ்செட்டியை சேர்ந்த பாஸ்கர், 27. இவர்களுக்கிடையே, நேற்று
முன்தினம், மது போதையில் தகராறு ஏற்பட்டது.
பின்,
பொட்டிரெட்டிப்பட்டியில் உள்ள பெரியம்மா வீட்டில் சிவா
துாங்கிக்கொண்டிருந்தார். அங்கு சென்ற பாஸ்கர், அம்மிக்கல்லை
சிவாவின் தலையில் போட்டு கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
எருமப்பட்டி போலீசார், இரண்டு தனிப்படை அமைத்து, தலைமறைவாக இருந்த
பாஸ்கரை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று துாசூர் ஏரி அருகே
பதுங்கியிருந்த பாஸ்கரை போலீசார் கைது செய்தனர்.அவரிடம்
நடத்திய விசாரணையில், சிவாவும், பாஸ்கரும் சென்னையில் ஒரே இடத்தில்
மண் வெட்டும் வேலை செய்து வந்துள்ளனர். அப்போது, அவர்களுக்குள் மது
போதையில் மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல், கடந்த, 21ல் மது
போதையில் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரம் தாங்காத
பாஸ்கர், அம்மிக்கல்லை சிவாவின் தலையில் போட்டு கொலை செய்துவிட்டு
தப்பியது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட பாஸ்கரை,
சேந்தமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில்
அடைத்தனர்.
