/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த பஸ் லாரி மீது மோதி விபத்து: 8 பேர் படுகாயம்

ADDED : அக் 02, 2024 01:59 AM
டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த பஸ்
லாரி மீது மோதி விபத்து: 8 பேர் படுகாயம்
பள்ளிப்பாளையம், அக். 2-
சாலையில் சென்ற அரசு பஸ்சின் டயர் திடீரென வெடித்ததில், கட்டுப்பாட்டை இழந்து எதிரே சென்ற லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில், 8 பேர் படுகாயமடைந்தனர்.
ஈரோட்டில் இருந்து எஸ்.பி.பி., காலனி பகுதிக்கு, அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு, நேற்று காலை, 10:00 மணிக்கு, பள்ளிப்பாளையம், ஆர்.எஸ்., சாலையில் சென்று கொண்டிருந்தது. தனியார் பேப்பர் மில் அருகே சென்றபோது, பஸ்சின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிரே கரும்பு சக்கை ஏற்றி வந்த லாரி மீது மோதியது. இதில், பஸ், லாரியின் முன்பகுதி முழுமையாக சேதமடைந்தது.விபத்தில், அரசு பஸ் டிரைவர் செல்வராஜ், 58, கண்டக்டர் முருகன், 55, லாரி டிரைவர் நாகராஜ், 30, மற்றும் பஸ்சில் பயணம் செய்த ரங்கன், மோகன்குமார், லட்சமி, சமாதானம், செல்வராஜ் உள்ளிட்ட, 8 பேர் படுகாயமடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள், அவர்களை மீட்டு பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து பள்ளிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.