/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொண்டை ஊசி வளைவில் விபத்து தடுப்பான் அமைப்பு
/
கொண்டை ஊசி வளைவில் விபத்து தடுப்பான் அமைப்பு
ADDED : டிச 26, 2024 01:19 AM
சேந்தமங்கலம், டிச. 26-
நாமக்கல் மாவட்டத்தில் மூலிகைகள் நிறைந்த சுற்றுலா தலமாக கொல்லிமலை உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து, 1,200 மீ., உயரத்தில் உள்ள இந்த மலைக்கு, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து, விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். 70 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட இந்த சாலையில் விபத்து ஏற்படாமல் இருக்க, தடுப்புகள், இரும்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், கொண்டை ஊசி வளைவுகளில் விபத்து ஏற்பட்டாலும், உயிரிழப்புகளை தடுக்க, ஆபத்தான கொண்டை ஊசி வளைவான, 13 முதல், 30வது கொண்டை ஊசி வளைவு வரை, 1,500 மீ., தொலைவிற்கு, 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரப்பர் மூலம் உருவாக்கப்பட்ட உருளை விபத்து தடுப்பான்கள் அமைக்க சர்வே பணி கடந்த ஆக.,ல் நடந்தது. தற்போது, 50, 64வது கொண்டை ஊசி வளைவுகளில் ரப்பர் உருளை வடிவிலான விபத்து தடுப்பான்கள் அமைக்கும் பணி நடந்து முடிந்துள்ளது. இதனால், விபத்து நடந்தாலும் பெருமளவில் உயிர்சேதம் ஏற்படாது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.