/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தி.கோடு செங்குந்தர் இன்ஜினியரிங் கல்லுாரியில் சாதனையாளர் தின விழா
/
தி.கோடு செங்குந்தர் இன்ஜினியரிங் கல்லுாரியில் சாதனையாளர் தின விழா
தி.கோடு செங்குந்தர் இன்ஜினியரிங் கல்லுாரியில் சாதனையாளர் தின விழா
தி.கோடு செங்குந்தர் இன்ஜினியரிங் கல்லுாரியில் சாதனையாளர் தின விழா
ADDED : ஏப் 29, 2025 01:43 AM
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு செங்குந்தர் இன்ஜினியரிங் கல்லுாரியில், வேலைவாய்ப்பு சாதனையாளர் தின விழா நடந்தது. செங்குந்தர் கல்வி நிறுவனங்கள் தலைவர் ஜான்சன்ஸ் நடராஜன் தலைமை வகித்தார். முதல்வர் சதீஷ்குமார் வரவேற்றார். தாளாளர் பாலதண்டபாணி, பொருளாளர் தனசேகரன், செயல் இயக்குனர் அரவிந்த் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கம்ப்யூட்டர் துறை தலைவர் சக்திவேல் வேலைவாய்ப்ப்பு அறிக்கை வாசித்தார். சென்னை மோவெட் டெக்னாலஜிஸ் சீனியர் அசோசியேட் டைரக்டர் பத்மாஜெயராமன், 2024--2025ம் கல்வியாண்டில், 282 மாணவ, மாணவியருக்கு வேலைவாய்ப்புக்கான ஆணை வழங்கி பேசினர்.
அப்போது, ''மாணவர்கள் புதிய தொழில் நுட்ப வளர்ச்சியை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டவேண்டும். மாணவர்கள் எந்த துறையில் வேலை செய்தாலும் உண்மையாகவும், நேர்மையாகவும் பணி செய்ய வேண்டும்,'' என்றார்.
வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்கள் ஆண்டு சம்பளம், ஆறு
லட்சம் ரூபாயாகவும், சராசரி ஆண்டு வருமானம், 3.50 லட்சம் ரூபாயாகவும் இருந்தது. வேலைவாய்ப்பு பெற்ற மாணவ, மாணவியரை, துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பாராட்டினர்.