/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'அவதூறு மற்றும் பொய் செய்திகளை பரப்பினால் நடவடிக்கை'
/
'அவதூறு மற்றும் பொய் செய்திகளை பரப்பினால் நடவடிக்கை'
'அவதூறு மற்றும் பொய் செய்திகளை பரப்பினால் நடவடிக்கை'
'அவதூறு மற்றும் பொய் செய்திகளை பரப்பினால் நடவடிக்கை'
ADDED : மார் 18, 2024 03:25 AM
நாமக்கல்: ''சமூக வலைதளத்தில் அவதுாறு மற்றும் பொய் செய்திகளை பரப்பினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, நாமக்கல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் உமா எச்சரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சமூக வலைதளத்தில், தேர்தல் தொடர்பாக அவதுாறு, பொய் செய்திகளை பரப்பினால், ஜாமினில் வராத முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாமக்கல் லோக்சபா தொகுதியில், 68 பதற்றமான ஓட்டுச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. 1,660 ஓட்டுச்சாவடி மையங்கள், தேர்தலுக்கு தயாராக உள்ளன. அரசு, பொது இடங்களில் உள்ள அரசியல் விளம்பரங்கள், 72 மணி நேரத்தில் அழிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொகுதி முழுதும், 42 பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் தொடர்பாக இதுவரை, மூன்று புகார்கள் வந்துள்ளன. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டம் நடத்த, 25 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில், 10 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் அலுவலர்கள், 'ஜிபிஎஸ்' மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

