/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நிரம்பி வழியும் குப்பை அகற்ற நடவடிக்கை தேவை
/
நிரம்பி வழியும் குப்பை அகற்ற நடவடிக்கை தேவை
ADDED : மார் 11, 2026 08:41 AM
நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை ஒன்றியம், கார்கூடல்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மெட்டாலா, ஆத்துார் பிரதான சாலையில் அமைந்-துள்ளது.
இங்கு
காய்கறி மண்டிகள் அதிகம் உள்ளதால், எப்போதும் பொதுமக்கள்,
விவசாயிகள், வியாபாரிகள் கூட்டம் அதிகம் இருக்கும். இங்குள்ள வணிக
நிறுவனங்கள், காய்கறி மண்டிகள், வீடுகளில் சேகரிக்கப்படும்
குப்பைகளை கொட்ட ஆங்காங்கே குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளன.
கடந்த
இரண்டு தினங்களாக குப்பைகளை அள்ளவில்லை. இதனால், மெட்டாலா
சாலையோரம் வைக்கப்பட்டிருந்த குப்பை தொட்டி அனைத்தும் குப்பையால்
நிரம்பி, சாலையிலும் மலைபோல் குவிந்து வருகிறது.
இதனால்,
இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்-கேட்டை
ஏற்படுத்தி வருகிறது. எனவே, விடுமுறை நாட்களிலும் குப்பைகளை
சுத்தம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.

