/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கேரளா அரசு அணை கட்டுவதை தடுக்க நடவடிக்கை தேவை
/
கேரளா அரசு அணை கட்டுவதை தடுக்க நடவடிக்கை தேவை
ADDED : மே 24, 2024 06:56 AM
நாமக்கல் : கேரளா அரசு, அனுமதி பெறாமல் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை தடுத்த நிறுத்த விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி வெளிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:அமராவதி அணையின் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான சிலந்தி ஆற்றின் குறுக்கே, தடுப்பணை கட்டும் பணியை எவ்வித அனுமதியும் இன்றி கேரள அரசு தொடங்கியுள்ளது. இதனால் அமராவதி அணைக்கு நீர்வரத்து வரத்து குறைந்து, பாசன வசதி பெறும், 54,637 ஏக்கர் நிலங்களும் பாதிக்கப்படும். விவசாயிகளுடைய வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாகும். திருப்பூர், திண்டுக்கல், கரூர் மாவட்ட விவசாயிகள் நெல், கரும்பு, வாழை, தென்னை பயிர் செய்து வருகின்றனர்.தடுப்பணை கட்டுவதால் விவசாயம் செய்து வரும் பரப்பளவு, 10,000 ஏக்கர் குறையும். மேலும் இந்த மூன்று மாவட்டங்களுக்கு குடிநீர் கட்டுப்பாடு ஏற்படும். எனவே, அமராவதி அணை பாசன விவசாயிகள் நலன் கருதி, அனுமதி பெறாமல் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட கேரள அரசு தொடங்கியுள்ள பணியை உடனடியாக தடுத்து நிறுத்த, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.