/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கட்டுக்குள் வராத புகையிலை விற்பனை துறை அதிகாரிகள் நடவடிக்கை 'வீண்'
/
கட்டுக்குள் வராத புகையிலை விற்பனை துறை அதிகாரிகள் நடவடிக்கை 'வீண்'
கட்டுக்குள் வராத புகையிலை விற்பனை துறை அதிகாரிகள் நடவடிக்கை 'வீண்'
கட்டுக்குள் வராத புகையிலை விற்பனை துறை அதிகாரிகள் நடவடிக்கை 'வீண்'
ADDED : ஜூன் 26, 2025 01:36 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில் குட்கா, புகையிலை விற்பனை அதிகரித்துள்ளது. அதுவும், பள்ளி அருகிலும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும் ஜோராக நடக்கிறது.
குறிப்பாக ஒட்டமெத்தை, சந்தைப்பேட்டை, ஆவாரங்காடு, அக்ரஹாரம், வெப்படை, ஆவத்திபாளையம், கொக்கராயன்பேட்டை உள்ளிட்ட பெரும்பாலான பகுதியில் குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை ஜோராக நடந்து வருகிறது. பள்ளிப்பாளையம் வட்டார உணவு பாதுகாப்பு துறையினர், என்ன தான் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தாலும், அபராதத்தை கட்டிவிட்டு மறுநாளே விற்பனையை துவங்குகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அக்ரஹாரம் பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 70,000 ரூபாய் மதிப்புள்ள, 45 கிலோ புகையிலை பொருட்களை, பள்ளிப்பாளையம் போலீசார் பறிமுதல் செய்து, டீ துாள் வியாபாரியை கைது செய்தனர். எனவே, உணவு பாதுகாப்பு துறை, போலீசார் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.