ADDED : அக் 02, 2024 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடிகர் சிவாஜி
பிறந்த நாள் விழா
ராசிபுரம், அக். 2-
ராசிபுரத்தில் பல்வேறு இடங்களில் நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது ரசிகர்கள் மட்டுமின்றி சமூக அமைப்பினர், காங்., கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு துறையினர், அவரது பிறந்தநாளை கொண்டாடினர். ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிவாஜி கணேசன் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் துாவி பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதேபோல், வெண்ணந்துார், நாமகிரிப்பேட்டை குருசாமிபாளையம் உள்ளிட்ட இடங்களில், அவரது படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர்.