/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தீவனத்தில் சோயா எண்ணெய் சேர்த்துகோழிக்கு வெப்ப அயர்ச்சியை குறைக்கலாம்
/
தீவனத்தில் சோயா எண்ணெய் சேர்த்துகோழிக்கு வெப்ப அயர்ச்சியை குறைக்கலாம்
தீவனத்தில் சோயா எண்ணெய் சேர்த்துகோழிக்கு வெப்ப அயர்ச்சியை குறைக்கலாம்
தீவனத்தில் சோயா எண்ணெய் சேர்த்துகோழிக்கு வெப்ப அயர்ச்சியை குறைக்கலாம்
ADDED : ஏப் 23, 2025 01:47 AM
நாமக்கல்,:'தீவனத்தில் சோயா எண்ணெய் சேர்ப்பதன் மூலம், கோழிகளுக்கு ஏற்படும் வெப்ப அயர்ச்சியை குறைக்கலாம்' என, கோழி பண்ணையாளர்களுக்கு நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆலோசனை மையம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து மையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்டத்தில், கடந்த வார வானிலை பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே, 98.6 டிகிரி மற்றும் 77 டிகிரியாக நிலவியது. மாவட்டத்தில் சில இடங்களில் லேசான மழை பதிவாகியுள்ளது. அடுத்த ஐந்து நாட்களுக்கு வானம் பெரும்பாலும் தெளிவாகவும் சில இடங்களில் லேசான மழை பெய்யும். பகல் வெப்பம், 102.2 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம், 78.8 டிகிரியாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் தெற்கிலிருந்து வீசும்.
சிறப்பு ஆலோசனை
கோடை காலத்தில் கோழிகளுக்கு நாள் முழுவதும், அதிக வெப்பமில்லாமல் குளிர்ச்சியாக குடிநீர் கிடைக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். கோழி தீவனத்தில் சோயா எண்ணெயை சேர்ப்பதன் மூலம், வெப்ப அயர்ச்சியை குறைக்கலாம்.
கோடை காலங்களில் காலை, 11:00 மணிக்கு முன்பாகவே கோழிகளுக்கு தீவனம் அளித்து முடித்து, தீவன தட்டினை காலி செய்து விட வேண்டும். தீவனத்தில் தேவையான அளவு எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் உயிர்சத்துக்கள் சேர்ப்பதன் மூலம், வெப்ப அயர்ச்சியின் தாக்கம் மற்றும் உற்பத்தி குறைவை தவிர்க்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

