/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தாறுமாறு வாகனங்களால் அடிக்கடி உயிர்பலி வேகத்தை கட்டுப்படுத்த கூடுதல் பேரிகார்டு தேவை
/
தாறுமாறு வாகனங்களால் அடிக்கடி உயிர்பலி வேகத்தை கட்டுப்படுத்த கூடுதல் பேரிகார்டு தேவை
தாறுமாறு வாகனங்களால் அடிக்கடி உயிர்பலி வேகத்தை கட்டுப்படுத்த கூடுதல் பேரிகார்டு தேவை
தாறுமாறு வாகனங்களால் அடிக்கடி உயிர்பலி வேகத்தை கட்டுப்படுத்த கூடுதல் பேரிகார்டு தேவை
ADDED : மே 29, 2025 01:38 AM
பள்ளிப்பாளையம் ;மாதேஸ்வரன் கோவில் பஸ் ஸ்டாப் பிரிவு சாலையில், தாறுமாறாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர்பலி ஏற்படுகிறது. விபத்தை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோட்டில் இருந்து சங்ககிரி செல்லும் பிரதான சாலையில், பள்ளிப்பாளையம் அடுத்த மாதேஸ்வரன் கோவில் பஸ் ஸ்டாப் உள்ளது.
இப்பகுதியில் இருந்து நான்கு சாலை பிரிகிறது. பிரிவு சாலை என்பதால், ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், ஈரோட்டில் இருந்து சங்ககிரி செல்லும் பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும், இந்த மாதேஸ்வரன் கோவில் பிரிவு சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். வேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர்பலி ஏற்படுகிறது. கடந்த, 24ல் தறித்தொழிலாளி ஒருவர், டூவீலரில் மாதேஸ்வரன் கோவில் பஸ் ஸ்டாப் பிரிவு சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, அரசு பஸ் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்து நடப்பதால், பிரிவு சாலையை கடக்கவே, வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் மக்களும் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து, அக்ரஹாரம் பஞ்., முன்னாள் துணைத்தலைவர் சின்னதம்பி கூறியதாவது:மாதேஸ்வரன் கோவில் பஸ் ஸ்டாப் பிரிவு சாலையில், கடந்த, இரண்டு ஆண்டில் மட்டும், ஐந்து பேர் விபத்து ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது. இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்க அனுமதி இல்லை என்பதால், வேகமாக வரும் வாகனத்தை கட்டுப்படுத்த சாலையின் குறுக்கே, 'பேரிகார்டு' வைக்கப்பட்டது. ஆனாலும், வேகமாக வரும் வாகனங்களால் விபத்து நடக்கிறது. எனவே, அடுத்தடுத்த இரண்டு, மூன்று இடங்களில் கூடுதலாக பேரிகார்டு வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.