ADDED : ஜூலை 06, 2026 01:26 AM
அ நிறம் | அளவு
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, தும்பல்பட்டி ஊராட்சியில் அடிமலைப்பட்டி, சாமகுட்டப்பட்டி, வேடப்பட்டி, ஜல்லுாத்துப்பட்டி, நடுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில், 6,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்-கின்றனர். தும்பல்பட்டிக்கு தினமும், 1.45 லட்சம் லிட்டர் காவிரி குடிநீர் வழங்க வேண்டும்.
அதற்கும் குறைவாக குடிநீர் வருவதால் பற்றாக்குறை நிலவுகி-றது. உள்ளுர் குடிநீரில் உப்பு கலந்துள்ளதால் பயன்படுத்த முடிய-வில்லை. கூடுதலாக காவிரி குடிநீர் வழங்க, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
