/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போதை பழக்கத்திற்கு அடிமையாகிவிட கூடாது மாணவர்களுக்கு கூடுதல் எஸ்.பி., அறிவுரை
/
போதை பழக்கத்திற்கு அடிமையாகிவிட கூடாது மாணவர்களுக்கு கூடுதல் எஸ்.பி., அறிவுரை
போதை பழக்கத்திற்கு அடிமையாகிவிட கூடாது மாணவர்களுக்கு கூடுதல் எஸ்.பி., அறிவுரை
போதை பழக்கத்திற்கு அடிமையாகிவிட கூடாது மாணவர்களுக்கு கூடுதல் எஸ்.பி., அறிவுரை
ADDED : ஜூன் 25, 2025 01:23 AM
மோகனுார், ''மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகிவிட கூடாது. அவற்றை தடுக்க உறவினர்கள், நண்பர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என, கூடுதல் எஸ்.பி., தனராசு
பேசினார்.
மோகனுார் போலீஸ் சரகத்திற்குட்பட்ட என்.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. மோகனுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ஆண்ட்ரோஸ் வரவேற்றார். மதுவிலக்கு ஆய்வாளர் சங்கரபாண்டியன் முன்னிலை வகித்தார். நாமக்கல் கூடுதல் எஸ்.பி., தனராசு பேசியதாவது:
மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகிவிட கூடாது. அதன் மூலம், சமூகம் சீரழிந்துவிடும். உங்களுக்கு, அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. போதைப்பொருள் விற்பனை, சைபர் குற்றங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து தெரியவந்தால், தகவல் தெரிவிக்கலாம். அவ்வாறு தகவல் தெரிவிப்போர் பெயர் வெளியிடாமல் ரகசியம் காக்கப்படும்.
பெண்கள் தொடர்பாக
புகாருக்கு, 181, பெண் குழந்தைகள் தொடர்பான குற்றங்களுக்கு, 1098, சைபர் கிரைம் குற்றங்களுக்கு, 1930, போதை பொருள் தொடர்பான தகவல்களுக்கு, 10581 ஆகிய கட்டணமில்லா தொலைபேசியில் தகவல்
தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, போதைப்பொருள் பயன்படுத்தவதால் ஏற்படும் தீமைகள், போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க தங்களது உறவினர்கள், நண்பர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விபத்துகளை தவிர்க்க போக்குவரத்து விதிகளை பின்பற்றி வாகனம் ஓட்ட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.
எஸ்.ஐ.,க்கள் பாஸ்கரன், கவிப்பிரியா, போலீசார், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.