/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆதிவிநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
/
ஆதிவிநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : ஜூலை 17, 2025 02:31 AM
மோகனுார், மோகனுார் தாலுகா, மணப்பள்ளி பஞ்., தீர்த்தாம்பாளையத்தில், ஆதிவிநாயகர் ஆலயம் அமைந்துள்ளது.
இக்கோவில் திருப்பணி மிகுந்த பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்டது. திருப்பணிகள் முடிந்த நிலையில், நேற்று கும்பாபிஷேகம் செய்ய விழாக்குழுவினர் முடிவு செய்தனர். இதையடுத்து, நேற்று முன்தினம், யாகசாலை பூஜை, கணபதி வழிபாட்டுடன் நிகழ்ச்சி துவங்கியது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, 2-ம் கால யாகசலை பூஜை, கடம் புறப்பாடு நடந்தது.
இதையடுத்து, கோவில் விமானம், மூலவர் ஆதி விநாயகருக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.
தொடர்ந்து, சிறப்பு அபிஷேகம், சுவாமி தரிசனம் நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், விழாக்குழுவினர், ஊர்மக்கள் செய்திருந்தனர்.