/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆதிபராசக்தி மன்றம் சார்பில் கலச விளக்கு வேள்வி பூஜை
/
ஆதிபராசக்தி மன்றம் சார்பில் கலச விளக்கு வேள்வி பூஜை
ஆதிபராசக்தி மன்றம் சார்பில் கலச விளக்கு வேள்வி பூஜை
ஆதிபராசக்தி மன்றம் சார்பில் கலச விளக்கு வேள்வி பூஜை
ADDED : டிச 09, 2024 07:11 AM
மல்லசமுத்திரம்: எலச்சிபாளையம் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின், 32ம் ஆண்டு விழா மற்றும் கலச விளக்கு வேள்வி பூஜை, நேற்று காலை, 8:00 மணிக்கு மன்ற தலைவர் சகுந்தலாதேவி தலைமையில் நடந்தது.
துணைத்தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். சேந்தமங்கலம் சக்திபீட பொறுப்பாளர் கிருபாகரன், ஓம்சக்தி கொடியை ஏற்றி வைத்தார். வேள்விக்குழு மாவட்ட செயலாளர் தியாகராஜன் வேள்வி பூஜையை தொடங்கி வைத்தார். சுற்றுவட்டாரத்தில் உள்ள செவ்வாடை பக்தர்கள், 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கலச விளக்கு வேள்வி பூஜையை மாவட்ட வேள்வி குழு கலைவாணி நடத்தி வைத்தார்.
மேற்கு மாவட்ட துணைத்தலைவர் ராமகிருஷ்ணன், நிர்வாகி சண்முகம் மற்றும் வட்டார பொறுப்பாளர்கள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.