/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நிர்வாகிகள் தேர்வு நாமகிரிப்பேட்டை:
/
நிர்வாகிகள் தேர்வு நாமகிரிப்பேட்டை:
ADDED : ஜூலை 21, 2025 08:13 AM
இருசக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர் சங்கத்தின், நாமகிரிப்பேட்டை கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யும் கூட்டம், நேற்று நடந்தது. தலைவராக குப்புசாமி, செயலாளராக சேகர், பொருளாளராக முனியப்பன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில், புதிய நிர்வாகிகளுக்கு உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர். தொடர்ந்து மாவட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், தலைவர் குப்புசாமி, புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி பேசினார். உறுப்பினர் சேர்க்கை, உறுப்பினர் குடும்பத்திற்கான மருத்துவ காப்பீடு குறித்தும் பேசினார்.
மேலும், மெக்கானிக் அனைவரும் ஹெல்மெட் அணிந்து வண்டி ஓட்ட வேண்டும் என அறிவுறுத்தினார்.
அடுத்த கூட்டத்திற்கு மாநில நிர்வாகிகளை அழைப்பது, சந்தா வசூலிப்பது, சங்கத்திற்கான வளர்ச்சி நிதி உருவாக்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.