/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு கலை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்
/
அரசு கலை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்
ADDED : மே 11, 2025 01:12 AM
குமாரபாளையம், குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை குறித்து, கல்லுாரி முதல்வர்(பொ) சரவணாதேவி வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 2025-26ம் கல்வியாண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளில் சேர, www.tngasa.in என்ற இணையதள முகவரியில், கடந்த, 7 முதல் மே, 27 வரை விண்ணப்பிக்கலாம் என, தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், பி.காம்.,-பி.பி.ஏ.,-பி.எஸ்சி., கணினி அறிவியல், பி.எஸ்சி., இயற்பியல், பி.எஸ்சி., வேதியியல், பி.எஸ்சி., கணிதம் ஆகிய பட்டப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவ, மாணவியர், கல்லுாரி குறியீட்டு எண்: 1031013ஐ பயன்படுத்தி இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். தேவையான ஆலோசனைகளை கல்லுாரியின் மாணவர் சேர்க்கை உதவி மையத்தில் பெற்று பயனடைய கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான விபரங்களை www.tngasa.in மற்றும் www.gasckpm.org என்ற இணையதளத்தில் உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.