தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்

அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்

அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்


ADDED : நவ 14, 2024 07:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 14, 2024 07:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ப.வேலுார்: -பரமத்தியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், பரமத்தி ஒன்றியம் வடக்கு, தெற்கு, பரமத்தி மற்றும் வேலுார் பேரூராட்சி அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம், நேற்று முன்தினம் மாலை நடந்தது. பரமத்தி தெற்கு ஒன்றிய செயலாளர் வெற்றிவேல், வடக்கு ஒன்-றிய செயலாளர் ரவி, பரமத்தி நகர செயலாளர் சுகுமார், ப.வேலுார் நகர செயலாளர் பொன்னிவேல் ஆகியோர் முன்-னிலை வகித்தனர். பரமத்தி தெற்கு ஒன்றிய

அவைத் தலைவர் சுப்பிரமணி வரவேற்றார். பரமத்தி வேலுார் எம்.எல்.ஏ., சேகர் தலைமை வகித்தார்.முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டார். அவர் பேசு-கையில், ''வரும், 2026 சட்டசபை தேர்தலில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கடுமையாக உழைத்து, 210 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியமைக்க

வேண்டும்,'' என்றார். மாவட்ட வர்த்-தக அணி செயலாளர் தமிழ்மணி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் தனசேகரன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் பொன்னுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us