ADDED : நவ 06, 2026 05:05 AM
அ நிறம் | அளவு
பள்ளிப்பாளையம்:பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடித்து, விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வேண்டும் என, வெப்படை தீயணைப்புத்துறை அலுவலகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு பட்டாசுகளை நடு வீதியில் வைத்து வெடிப்பது ஆபத்தானது. சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும்போது, பெற்றோர்கள் உடனிருப்பது பாதுகாப்பானது. பட்டாசு வெடிக்கும் போது அருகில் ஒரு பக்கெட்டில் தண்ணீரை வைத்துக் கொள்ள வேண்டும். பெரிய நீளமான பத்தி கொண்டு, கண்ணுக்கு நேர் இல்லாமல், சாயந்த நிலையில் நின்று கொண்டு பட்டாசு வெடிக்க வேண்டும்.
வெடிக்காத பட்டாசுகளை தொடுவதோ, எடுக்கவோ கூடாது. அரசு அறிவித்துள்ள நேரங்களில் மட்டும் பட்டாசு வெடிக்க வேண்டும். தீ விபத்தில்லா தீபாவளியை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என, தெரிவித்துள்ளனர்.
