/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விளைச்சல் அதிகரிக்க விதை பரிசோதனை செய்ய அறிவுரை
/
விளைச்சல் அதிகரிக்க விதை பரிசோதனை செய்ய அறிவுரை
ADDED : பிப் 03, 2026 06:44 AM
நாமக்கல்: விளைச்சல் அதிகரிக்க விதைகளை பரிசோ-தனை செய்து பயன்படுத்த வேண்டும்' என, வேளாண் அலுவலர்கள் ரஞ்சிதா, தேவிப்பிரியா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் வெளியிட்ட அறிக்கை:நல்ல விதையே பயிர் சாகுபடிக்கு முக்கியமான இடுபொருளாக விளங்குகிறது. விதைகள் நல்ல முளைப்புத்திறன், புறத்துாய்மை, அளவான ஈரப்-பதம் கொண்டதாக இருக்க வேண்டும். நல்ல தர-மான விதைகளை விதைப்பு செய்யாவிட்டால், போதுமான பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்ப-டாமல், விளைச்சல் குறைந்து விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும். இதை தவிர்க்க, விவசா-யிகள் தங்களிடமுள்ள காய்கறி மற்றும் இதர வகை விதைகளையும், விற்பனையாளர்கள் தாங்கள் விற்பனை செய்யும் விதைகளையும் பரி-சோதனை செய்து கொள்ளலாம். விதையின் தரத்தை அறிந்துகொள்ள, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், அறை எண். 13ல் இயங்கி வரும் விதை பரிசோதனை நிலையத்தில், ஒரு மாதி-ரிக்கு, 80 ரூபாய்- கட்டணம் செலுத்தி, விதையின் தரத்தை அறிந்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

