/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நுண்ணுயிர் பாக்டீரியா அதிகம் உள்ள அசோஸ்பைரில்லம் பயன்படுத்த அறிவுரை
/
நுண்ணுயிர் பாக்டீரியா அதிகம் உள்ள அசோஸ்பைரில்லம் பயன்படுத்த அறிவுரை
நுண்ணுயிர் பாக்டீரியா அதிகம் உள்ள அசோஸ்பைரில்லம் பயன்படுத்த அறிவுரை
நுண்ணுயிர் பாக்டீரியா அதிகம் உள்ள அசோஸ்பைரில்லம் பயன்படுத்த அறிவுரை
ADDED : மார் 31, 2025 03:13 AM
நாமகிரிப்பேட்டை: நுண்ணுயிர் பாக்டீரியா அதிகம் உள்ள அசோஸ்பைரில்லத்தை பயன்படுத்த, நாமகிரிப்பேட்டை வேளாண் உதவி இயக்குனர் உமாமகேஸ்வரி, விவசாயிகளுக்கு யோசனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:அசோஸ்பைரில்லம் என்பது ஒரு நுண்ணுயிர் பாக்டீரியா. இது மண்ணை பண்படுத்த அடி உரமாக பயன்படுகிறது. இது மண்-ணிற்கு தேவையான நைட்ரஜனை, வளிமண்டலத்திலிருந்து கிர-கித்து பயிர்களுக்கு வழங்கும். இது பெரும்பாலும் பயிர்களின் முதல் நிலை வளர்ச்சிக்கு அடியுரமாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் பயிர்களுக்கு சிபாரிசு செய்யப்படும் தழைச்சத்து அளவில், 20 முதல், 40 சதவீதம் வரை குறைத்துக்கொள்ள முடியும். இந்த வகை நுண்ணுயிரானது பயிர் வளர்ச்சிக்கு தேவை-யான சில வளர்ச்சி ஊக்கியையும் உற்பத்தி செய்கிறது.
மகசூலை அதிகரிப்பதுடன், வறட்சியை தாங்கும் திறனையும் சில பயிர்களுக்கு கொடுக்கிறது. மேலும், இவைகள் அழிந்த-வுடன் மண்ணில் மக்கி, பயிர்களுக்கு உரமாகவும், மண்ணின் வளத்தை காக்கவும் உதவுகிறது. மண்ணில் கலக்கும்போது, திரவ அசோஸ்பைரில்லம் வளர்ச்சியை ஊக்குவித்து, பயிருக்கு பச்சை நிறத்தை தருகிறது.
சாம்பல், மணிச்சத்து மற்றும் இதர ஊட்டச்சத்துக்களை பயிர்கள் எடுத்துக்கொள்வதற்கு உதவுகிறது. மேலும், பழங்களுடைய சதைப்பகுதியை அதிகப்படுத்தி, புரோட்டீன் சதவீதத்தை அதிகப்-படுத்துகிறது.
வயலில், அசோஸ்பைரில்லம் செயலற்ற நிலையில் இருந்தால், வளர்ச்சி ஊக்குவிக்கும் செயல்கள் இல்லாமல் பயிர் மஞ்சள் கலந்த, பச்சை நிற இலைகளை கொண்டதாக மாறிவிடும். எனவே அசோஸ்பைரில்லத்தை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.