/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுரை
/
குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுரை
ADDED : ஏப் 13, 2025 04:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சி சேர்மன் கவிதா வெளியிட்டுள்ள செய்திக்கு-றிப்பு: ராசிபுரம் நகராட்சிக்கு, கூட்டுக்குடிநீர் திட்டத்தில், தமிழ்-நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வரு-கிறது.
கோடை காலம் என்பதால், மேட்டூர் கதவணையில் ஆண்டு பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதனால், 11ம் தேதி முதல், 25ம் தேதி வரை நகராட்சிக்கு வழங்கப்படும் குடிநீர் அளவு குறைவாக வழங்கப்படும் என, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

