/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரையாண்டு, செய்முறை தேர்வை எந்த புகாருமின்றி நடத்த அறிவுரை
/
அரையாண்டு, செய்முறை தேர்வை எந்த புகாருமின்றி நடத்த அறிவுரை
அரையாண்டு, செய்முறை தேர்வை எந்த புகாருமின்றி நடத்த அறிவுரை
அரையாண்டு, செய்முறை தேர்வை எந்த புகாருமின்றி நடத்த அறிவுரை
ADDED : டிச 04, 2024 01:54 AM
நாமக்கல், டிச. 4-
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளிகள் மற்றும் சுயநிதி பள்ளி முதல்வர்களுக்கான ஆலோசனை கூட்டம், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி அறிவுறுத்தல்படி, நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், நேற்று நடந்தது. மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம், தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் ஜோதி ஆகியோர் தலைமை வகித்தனர்.
கூட்டத்தில், இம்மாதம் நடக்க உள்ள அரையாண்டு தேர்வு மற்றும் அரையாண்டு செய்முறை தேர்வுகளை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. அரையாண்டு தேர்வு மற்றும் செய்முறை தேர்வுகளை எவ்வித புகாருக்கும் இடம் கொடுக்காமல் நடத்தவும் அறிவுரை வழங்கப்பட்டது.
தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் ஜோதி பேசுகையில், ''ஆசிரியர்கள் பாடக்குறிப்பு மற்றும் கற்றல் உபகரணங்கள் கொண்டு தான் மாணவர்களுக்கு வகுப்புகளில் கட்டாயம் பாடம் நடத்த வேண்டும். தனியார் பள்ளிகளின் பெயர் பலகைகள் அரசாணையின்படி கட்டாயம் தமிழில் வைக்க வேண்டும். பள்ளியில் உள்ளக புகார் குழு அமைக்க வேண்டும். போதை பொருட்களை தடை செய்யும் குழு அமைக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் கட்டாயம் பெற்றோர் ஆசிரியர் கழகம் ஏற்படுத்த வேண்டும். கட்டாய கல்வி சட்டப்படி, ஆரம்ப அனுமதி மற்றும் தொடர் அங்கீகாரம் இல்லாமல், எந்த ஒரு பள்ளியும் செயல்படக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் விவேக், இருக்கை பணி கண்காணிப்பாளர் சங்கர், உதவியாளர் கோகுல் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.