/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
45 நாட்களுக்கு பின் நாளை ஓட்டு எண்ணிக்கை; கட்சி நிர்வாகிகள் திக்... திக்... திக்...!
/
45 நாட்களுக்கு பின் நாளை ஓட்டு எண்ணிக்கை; கட்சி நிர்வாகிகள் திக்... திக்... திக்...!
45 நாட்களுக்கு பின் நாளை ஓட்டு எண்ணிக்கை; கட்சி நிர்வாகிகள் திக்... திக்... திக்...!
45 நாட்களுக்கு பின் நாளை ஓட்டு எண்ணிக்கை; கட்சி நிர்வாகிகள் திக்... திக்... திக்...!
ADDED : ஜூன் 03, 2024 07:14 AM
நாமக்கல் : நாமக்கல் லோக்சபா தொகுதி தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை, 45 நாட்களுக்கு பின் நாளை தொடங்க உள்ளதால், கட்சி நிர்வாகிகள் திக்... திக்... உணர்வுடன் காத்திருகின்றனர்.
நாமக்கல் லோக்சபா தேர்தலுக்கு, மார்ச், 20ல் வேட்புமனு தாக்கல் துவங்கியது. அதில், அ.தி.மு.க., - கொ.ம.தே.க., - பா.ஜ., -நா.த.க., மற்றும் சுயேச்சைகள் என, மொத்தம், 47 பேர், 58 மனுக்கள் தாக்கல் செய்தனர்.
தொடர்ந்து, 28ல் நடந்த பரிசீலனையில், 6 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 41 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. சுயேச்சை வேட்பாளர் ரேவதி, மனுவை வாபஸ் பெற்றதையடுத்து, 40 பேர் களத்தில் உள்ளனர்.
ஓட்டுப்பதிவு ஏப்., 19ல் நடந்து முடிந்தது. ஓட்டுப்பதிவு மிஷின்கள், திருச்செங்கோடு விவேகானந்தா கல்லுாரியில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. 45 நாட்களுக்கு பின், நாளை ஓட்டு எண்ணிக்கை நடக்கவுள்ளது.
இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில், தேசிய அளவில், பா.ஜ., அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றாலும், தமிழகத்தில், தி.மு.க., கூட்டணி கட்சியினர் அதிக இடங்களை பிடிக்கவுள்ளதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன. நாமக்கல் தொகுதியில், தி.மு.க., 35.5 சதவீதம் ஓட்டும், அ.தி.மு.க., 31.50 சதவீதம் ஓட்டும் பெறும் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
நான்கு சதவீதம் என்பது, 44,000 ஓட்டுகள் தான். இரண்டு கட்சிக்கும் இடையில், 4 சதவீதம் தான் வித்தியாசம் இருப்பதால், அ.தி.மு.க.,வினரும், தாங்களும் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது என, நம்பி வருகின்றனர். மிக குறைந்த ஓட்டு சதவீத வித்தியாசம் உள்ள தொகுதியில், நாமக்கல்லும் உள்ளதால், இரண்டு கட்சி நிர்வாகிகளும் திக்... திக்... திக்...! உணர்வுடன் நாளை நடக்கும் ஓட்டு எண்ணிக்கைக்காக காத்திருக்கின்றனர்.