/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பொங்கல் விடுமுறைக்கு பின் மீண்டும் இயங்கிய விசைத்தறிகள்
/
பொங்கல் விடுமுறைக்கு பின் மீண்டும் இயங்கிய விசைத்தறிகள்
பொங்கல் விடுமுறைக்கு பின் மீண்டும் இயங்கிய விசைத்தறிகள்
பொங்கல் விடுமுறைக்கு பின் மீண்டும் இயங்கிய விசைத்தறிகள்
ADDED : ஜன 25, 2024 12:51 PM
பள்ளிப்பாளையம் : பொங்கல் பண்டிகையையொட்டி விடப்பட்ட நீண்ட விடுமுறைக்கு பின், தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு திரும்பியதால், பள்ளிப்பாளையம் பகுதியில், நுாறு சதவீதம் விசைத்தறி கூடங்கள் இயங்க துவங்கின.நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் விசைத்தறி முக்கிய தொழிலாக உள்ளது.
இங்கு, 30,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்தாண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, 10 நாட்கள் நீண்ட விடுமுறை விடப்பட்டது. இதனால் எப்போதும் தறி இயங்கும் சத்தம் ஒலித்துக்கொண்டிருக்கும் பள்ளிப்பாளையம் பகுதியில், வெறிச்சோடி நிசப்தமாக காணப்பட்டது. மேலும், விசைத்தறிக்கு விடுமுறை என்பதால், அதனை சார்ந்து இயங்கும் ஓட்டல், டீக்கடை, பேக்கரி உள்பட பல்வேறு கடைகளுக்கு விடுமுறை அளித்தனர்.தற்போது, விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு சென்ற தொழிலாளர்கள், நேற்று முதல் மீண்டும் பணிக்கு திரும்பியதால், நுாறு சதவீதம் விசைத்தறி கூடங்கள் இயங்க துவங்கின. இதனால் பள்ளிப்பாளையம் முழுதும் விசைத்தறி இயங்கும் சத்தம் ஒலிக்க தொடங்கியது.