/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விவசாய தொழிலாளர் சங்கம் மனு கொடுக்கும் போராட்டம்
/
விவசாய தொழிலாளர் சங்கம் மனு கொடுக்கும் போராட்டம்
ADDED : ஜூலை 09, 2024 05:55 AM
எலச்சிபாளையம்: புள்ளாகவுண்டம்பட்டியில், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், 100 நாள் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு வேலை வேண்டி, மனுகொடுக்கும் போராட்டம் நடந்தது. அதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு, அரசு நிர்ணயித்தபடி, 100 நாள் வேலைகொடு அல்லது அவர்களுக்கு சட்டப்படி நிவாரணம் வழங்கு என்ற கோரிக்கையை முன்வைத்து, மனுகொடுக்கும் போராட்டம் நடந்தது.
தொடர்ந்து, புள்ளாகவுண்டம்பட்டி பஞ்சாயத்தில், மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமையில், பஞ்சாயத்தில் வேலைகேட்டு மனுக்கள் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட பஞ்., அதிகாரிகள் ஒப்புகை சீட்டு வழங்கினர். நிர்வாகிகள், பூமாலை, அழகுராஜா, சுப்பு, உமா, பழனிச்சாமி மற்றும் தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்கள் கலந்துகொண்டனர்.