ADDED : ஜூலை 15, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி, எருமப்பட்டி வட்டாரத்தில், தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பில், 'உழவரை தேடி' வேளாண்மை திட்ட முகாம், எஸ்.பழையபாளையம் கிராமத்தில் நடந்தது. எருமப்பட்டி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் பால்ஜாஸ்மின் தலைமை வகித்து பேசினார்.
அப்போது, இத்திட்டத்தின் நோக்கம், பயன்கள், செயல்படுத்தும் விதம், முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக விளக்கி கூறினர். ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தில் பயன்பெற விருப்பம் தெரிவித்த பயனாளிகளுக்கு, பயனாளி பதிவு செயலியில் பதிவும் செய்யப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் ராஜவேலு, பிரகாஷ் ஆகியோர் செய்திருந்தனர்.