/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விவசாய தொழிலாளர் சங்க அமைப்புக்குழு கூட்டம்
/
விவசாய தொழிலாளர் சங்க அமைப்புக்குழு கூட்டம்
ADDED : ஆக 02, 2025 01:40 AM
எலச்சிபாளையம், எலச்சிபாளையத்தில், நேற்று தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் அமைப்புக்குழு கூட்டம் நடந்தது. நிர்வாகி பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெயராமன் பேசினார். இதில், வரும், 18ல் சேலத்தில் நடக்கும் இ.கம்யூ., மாநில மாநாடு ஊர்வலத்தில், எலச்சிபாளையத்திலிருந்து, 100 பேர் கலந்துகொள்ள வேண்டும்.
உறுப்பினர் பதிவை வரும், 15க்குள் முடிக்க வேண்டும். மல்லசமுத்திரம் ஒன்றியம், மரப்பரை பஞ்., கட்டிப்பாளையம் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் இருந்து வரும் ஈக்கள், குடியிருப்புகளுக்குள் புகுந்து நாசம் செய்கின்றன. அவற்றை, சுகாதாரத்துறை அதிகாரிகள் மருந்து தெளித்து கட்டுப்படுத்த வேண்டும். நடவடிக்கை இல்லாத பட்சத்தில் வரும், 11ல் அங்கன்வாடி அருகே காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.