/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
6 தொகுதிகளிலும் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறுவது உறுதி'
/
6 தொகுதிகளிலும் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறுவது உறுதி'
6 தொகுதிகளிலும் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறுவது உறுதி'
6 தொகுதிகளிலும் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறுவது உறுதி'
ADDED : செப் 09, 2025 02:07 AM
நாமக்கல், 'வரும், 2026 சட்டசபை தேர்தலில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, ஆறு தொகுதிகளிலும் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறுவது உறுதி,'' என, முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார்.
பா.ஜ., மாவட்ட, நகர, ஒன்றிய, மண்டல தலைவர்கள் ஆலோசனை கூட்டம், நாமக்கல் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. பா.ஜ., மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சரோஜா, எம்.எல்.ஏ., சேகர், பா.ஜ., மாவட்ட தலைவர்கள் சரவணன், ராஜேஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி பேசியதாவது:
தமிழகத்தில் வரும், 2026ல் நடக்கும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று, இ.பி.எஸ்., முதல்வராக பதவியேற்பது உறுதியாகிவிட்டது. அதே நேரம், தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதை மக்கள் குறிக்கோளாக வைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில், வரும், 19, 20, 21ல், சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,சிற்கு, அ.தி.மு.க., - பா.ஜ.,வினர் சிறப்பான ஆதரவை தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பா.ஜ., மாவட்ட, ஒன்றிய, நகர, மண்டல நிர்வாகிகள், உறுப்பினர்கள், அ.தி.மு.க., நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.