/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
/
அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
ADDED : மார் 31, 2025 03:08 AM
ராசிபுரம்: ராசிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பட்டணம், சிங்களாந்தபுரம், கூனவேலம்பட்டிபுதுார் உள்ளிட்ட பகுதிகளில், அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. ஒன்றிய செயலாளர் சேகர் தலைமை வகித்தார்.
இதில், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா மற்றும் மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர், முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், பூத் கமிட்டி அமைப்பது, கமிட்டி உறுப்பினர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினர். மேலும், அடையாள அட்டை-களை சரி பார்த்து நிர்வாகிகளிடம் வழங்கினர்.தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசுகையில், ''வரும், 2026ம் ஆண்டு தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை நேரில் சந்-தித்து, தி.மு.க.,வின் பொய்யான வாக்குறுதிகளையும், அவர்களு-டைய ஊழல்கள் குறித்தும் விளக்கமாக கூறவேண்டும். தமிழ-கத்தில் கஞ்சா, கள்ளச்சாராய விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்தாத அரசாக, தி.மு.க., அரசு உள்ளது,'' என்றார். பட்டணம் பேரூராட்சி அ.தி.மு.க., செயலாளர் பாலு மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.