/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகி ஆலோசனை கூட்டம்
/
அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகி ஆலோசனை கூட்டம்
ADDED : மே 26, 2025 04:21 AM
நாமக்கல்: அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., உத்தரவுப்படி, நாமக்கல் மாவட்டத்தில், பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாமக்கல் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கீரம்பூரில் நேற்று நடந்தது. ஒன்றிய செயலாளர் சேகர் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் மயில் சுந்தரம் முன்-னிலை வகித்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ.,வும், மாநகர செயலாளருமான பாஸ்கர், பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் முரளி பாலு-சாமி, புதுச்சத்திரம் ஒன்றிய செயலாளர் கோபிநாத், நகர அவை தலைவர் விஜய்பாபு, மாணவர் அணி நிர்வாகி கோபி உள்பட பலர் பங்கேற்றனர்.