/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அ.தி.மு.க., நகர செயலாளருக்கு ஜாமின்
/
அ.தி.மு.க., நகர செயலாளருக்கு ஜாமின்
ADDED : ஜூன் 25, 2025 01:28 AM
ராசிபுரம், ராசிபுரத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் பாலசுப்பிரமணியம், 50; அ.தி.மு.க., நகர செயலாளராக உள்ளார். கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில், ராசிபுரம் நகராட்சி தலைவராக பதவி வகித்தார்.
கடந்த, 2013ல் இவரும், தற்போது, அ.ம.மு.க., மாவட்ட செயலாளராக உள்ள பழனிவேலும் சேர்ந்து, ரியல் எஸ்டேட் தொழில் செய்துள்ளனர். 'ராயல் ஹைடெக் சிட்டி' என்ற பெயரில் வீட்டுமனை பிரித்திருந்தனர். வீட்டு மனை தருவதாக தவணை முறையில் பணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. தவணை முடிந்தும் பலருக்கு வீட்டுமனை பிரித்து தராததால்
சர்ச்சையானது.
இந்நிலையில், சேலம் மாவட்டம், வீராணத்தை சேர்ந்த பத்மாவதி, 63, என்பவர், 'ஆன்லைன்' மூலம், நாமக்கல் மாவட்ட எஸ்.பி.,க்கு புகார் மனு அனுப்பியிருந்தார். இந்த புகாரில் பாலசுப்ரமணியத்தை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது
செய்தனர்.
பாலசுப்ரமணியம் ஜாமின் கேட்டு ராசிபுரம் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இதையடுத்து மனுவை விசாரித்த குற்றவியல் நீதிமன்ற நடுவர் மோகனப்பிரியா, பாலசுப்ரமணியத்திற்கு தினமும் ராசிபுரம் காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை ஜாமின் வழங்கினார்.
மறு உத்தரவு கிடைக்கும் வரை காலை, 10:00 மணி, மாலை, 6:00 மணி என, இரண்டு நேரமும் கையெழுத்திட வேண்டும். மேலும், பினைத்தொகையாக, 10,000 ரூபாய் கட்ட வேண்டும் என, நிபந்தனை விதித்துள்ளார். இதையடுத்து, நேற்று பாலசுப்ரமணியம் சிறையில் இருந்து வெளியே வந்தார்.