ADDED : பிப் 28, 2025 06:47 AM
குமாரபாளையம்: குமாரபாளையம் அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி பொதுக்கூட்டம் நடந்தது. நகர செயலாளர் பாலசுப்ரமணி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வைகை செல்வன் பங்கேற்றனர். இதில், முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பேசுகையில், ''தி.மு.க., அரசு நினைத்திருந்தால் கல்வியை, மாநில பட்டியலுக்கு கொண்டு வந்திருக்க முடியும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல சாதனைகளை புரிந்துள்ளார். தற்போதைய முதல்வரின் சாதனையில் ஏதேனும் ஒன்றை கூற முடியுமா,'' என்றார்.
முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசுகையில், ''சமீபத்தில் நடந்த, தி.மு.க., பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் என்ன செய்து விட்டார் இந்த தொகுதிக்கு என கேட்கின்றனர். மேலும், தாலுகா அலுவலகம் கொண்டு வந்தது அவர்கள் தான் என, சொல்லி இருக்கின்றனர். இது முன்னாள் முதலவர் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்டு, அ.தி.மு.க., ஆட்சியில் தற்காலிகமாக அண்ணாதுரை மண்டபத்தில் செயல்படுத்தப்பட்டு, புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு இங்கு கொண்டு வரப்பட்டது,'' என்றார்.

