/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ப.வேலுாரில் அ.தி.மு.க.,நீர்மோர் பந்தல் திறப்பு
/
ப.வேலுாரில் அ.தி.மு.க.,நீர்மோர் பந்தல் திறப்பு
ADDED : ஏப் 20, 2025 01:29 AM
ப.வேலுார்:-ப.வேலுார் பள்ளி பிரதான சாலையில் உள்ள, எம்.ஜி.ஆர்., சிலை அருகே, அ.தி.மு.க., சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா, நேற்று நடந்தது. பரமத்தி வேலுார் எம்.எல்.ஏ., சேகர், ப.வேலுார் நகர செயலாளர் பொன்னி வேலு ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னாள் அமைச்சர் தங்கமணி, நீர்மோர் பந்தலை திறந்து வைத்து, பொது மக்களுக்கு தர்பூசணி, வெள்ளரிக்காய் வழங்கினார். முன்னதாக எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து, ப.வேலுார் நகர செயலாளர் பொன்னி வேலு மரியாதை செலுத்தினார்.
பரமத்தி நகர செயலாளர் சுகுமார்,பொத்தனுார் நகர செயலாளர் நாராயணன், வக்கீல் லோகநாதன், முன்னாள் கவுன்சிலர் கலைமகள் செல்வம் உள்பட ஒன்றிய செயலாளர்கள், வார்டு செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

