ADDED : ஜூன் 01, 2025 01:13 AM
திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்ட அம்மா பேரவை சார்பில், திருச்செங்கோடு வடக்கு ஒன்றியம், தேவனாங்குறிச்சி ஊராட்சியில், தெருமுனை பிரசார நிகழ்ச்சி நடந்தது. அதில், 10 ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியின் சாதனை, நான்கு ஆண்டு, தி.மு.க., அரசின் அவல நிலைகளை என, பிரசாரம் செய்தனர்.
மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வக்கீல் சந்திரசேகர் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார். பின், வீடுவீடாகவும், கடைகள் நிறைந்த பகுதிகளிலும் துண்டுபிரசுரங்கள் வழங்கினார். அப்போது, ''அர்த்தநாரீஸ்வரர் கோவில் நிதி, 20 கோடி ரூபாய் என்ன ஆனது என்பது தெரியவில்லை,'' என்றார். வடக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் முரளிதரன், மாவட்ட துணை செயலாளர் முருகேசன், மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் செல்லப்பன், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் பரணிதரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.