/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குழாய் பதிக்க தோண்டியபோது கிடைத்த ஐம்பொன் அம்மன் சிலை
/
குழாய் பதிக்க தோண்டியபோது கிடைத்த ஐம்பொன் அம்மன் சிலை
குழாய் பதிக்க தோண்டியபோது கிடைத்த ஐம்பொன் அம்மன் சிலை
குழாய் பதிக்க தோண்டியபோது கிடைத்த ஐம்பொன் அம்மன் சிலை
ADDED : செப் 03, 2025 11:53 PM

மல்லசமுத்திரம்,:குடிநீர் வடிகால் வாரியத்தினர் குழாய் பதிக்க தோண்டியபோது, 21 கிலோ எடையில், ஐம்பொன் அம்மன் சிலை கிடைத்தது.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் யூனியன், மின்னாம்பள்ளி பொன்காளியம்மன் கோவில் அருகே, நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, குடிநீர் வடிகால் வாரியம் மூலம், காவிரி கூட்டு குடிநீர் குழாய் இணைப்பிற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடந்தது.
மூன்றடி தோண்டிய போது, இரண்டரை அடி உயரம், 21 கிலோ எடை கொண்ட அம்மன் ஐம்பொன் சிலை, பீடத்துடன் கண்டுபிடிக்கப்பட்டது.
இதை கண்ட அப்பகுதி மக்கள், அம்மன் சிலைக்கு பூஜை செய்து வழிபட்டனர். வி.ஏ.ஓ., ராஜமாணிக்கம், வையப்பமலை ஆர்.ஐ., விஜயா உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து, சிலையை கைப்பற்றி, திருச்செங்கோடு தாசில்தார் கிருஷ்ணவேணியிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து, பொன்காளியம்மன் கோவில் பூசாரி குழந்தைவேல் கூறியதாவது:
கடந்த, 1939ல் மின்னாம்பள்ளி கிராமத்தில் பொன்காளியம்மன் கோவில் கட்டப்பட்டது. கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், இக்கோவிலில் இருந்த ஐம்பொன்னாலான அம்மன், விநாயகர் சிலைகள் மர்ம நபர்களால் திருடப்பட்டன.
பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கோவில் அருகில் அந்த சிலைகளில் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. கலெக்டரிடம் மனு அளித்து, முறையாக அனுமதி பெற்று, சிலையை மீட்டு தினசரி பூஜை செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.