ADDED : அக் 29, 2024 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாராயம் காய்ச்சியவர் கைது
நாமகிரிப்பேட்டை, அக். 29-
நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மெட்டாலா பகுதியில் விஷச்சாராயம் காய்ச்சுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, நேற்று காலை, நாமக்கல் மதுவிலக்கு போலீசார், எஸ்.ஐ., மனோகரன் தலைமையில் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, மெட்டாலா அருகே, குரங்காத்துபள்ளம் பகுதியில், சேலம் மாவட்டம், வாழப்பாடி கருங்கல்பட்டியை சேர்ந்த ஜெகநாதன் மகன் தங்கராசு, 28, சாராயம் காய்ச்சுவதற்காக, ஊரல் போட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடத்திய சோதனையில், விஷ நெடியுடன் கூடிய கள்ளச்சாராயம் என்பது தெரியவந்தது. இதையடுத்து, 125 லிட்டர் சாராய ஊரல் மற்றும் ஒரு லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர். தங்கராஜை, நாமக்கல்
மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.