/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கு.பாளையத்தில் டி.எஸ்.பி., அலுவலகம் அமைக்க அனைத்து கட்சியினர் கோரிக்கை
/
கு.பாளையத்தில் டி.எஸ்.பி., அலுவலகம் அமைக்க அனைத்து கட்சியினர் கோரிக்கை
கு.பாளையத்தில் டி.எஸ்.பி., அலுவலகம் அமைக்க அனைத்து கட்சியினர் கோரிக்கை
கு.பாளையத்தில் டி.எஸ்.பி., அலுவலகம் அமைக்க அனைத்து கட்சியினர் கோரிக்கை
ADDED : நவ 02, 2025 12:48 AM
குமாரபாளையம், குமாரபாளையம் தாலுகா அலுவலகம், நகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபத்தில், 2016 பிப்., 27 முதல் செயல்பட துவங்கியது.
இதற்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு, 2024 பிப்., 27 முதல் செயல்பட துவங்கியது. குமாரபாளையம் பொதுமக்கள், நீதிமன்ற பணிகளுக்கு திருச்செங்கோடு நீதிமன்றம் சென்றுவந்த நிலையில், 2020 ஜூலை, 18ல் குமாரபாளையத்தில் நீதிமன்றம் கொண்டுவரப்பட்டது.
தற்போது, டி.எஸ்.பி., அலுவலகம் வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததன் பேரில், அதற்கான ஒப்புதல் கிடைத்துள்ளது. ஆனால், டி.எஸ்.பி., அலுவலகம் பள்ளிப்பாளையம் பகுதியில் அமைய உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு, குமாரபாளையம் பகுதி பொதுமக்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அனைத்து கட்சியினர் ஒன்று சேர்ந்து, குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணனிடம், நேற்று மனு ஒன்றை வழங்கினர். அதில், 'டி.எஸ்.பி., அலுவலகம், குமாரபாளையத்தில் அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
கூறினார்.
அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் சேகர், மக்கள் நீதி மய்யம் மண்டல செயலர் காமராஜ், மாவட்ட மகளிரணி செயலர் சித்ரா, காங்., நகர செயலர் ஜானகிராமன் பா.ம.க., நிர்வாகி சவுந்திரராஜன் உள்பட பலர் உடனிருந்தனர்.

