/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க 5வது வட்டக்கிளை மாநாடு
/
அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க 5வது வட்டக்கிளை மாநாடு
அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க 5வது வட்டக்கிளை மாநாடு
அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க 5வது வட்டக்கிளை மாநாடு
ADDED : ஜூலை 06, 2025 12:51 AM
நாமக்கல், தமிழக அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின், 5வது வட்டக்கிளை மாநாடு, நாமக்கல் -பரமத்தி சாலையில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது. வட்டக்கிளை தலைவர் அன்புகுமார் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் குப்புசாமி, மின்வாரிய ஓய்வூதியர் நலச்சங்க நிர்வாகி சின்னசாமி, அஞ்சல் ஆர்.எம்.எஸ்., ஓய்வூதியர் சங்க நிர்வாகி ராமசாமி சேந்தமங்கலம் வட்ட செயலாளர் கிருஷ்ணசாமி ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், ஊதிய குழுவின் பரிந்துரைகளிலிருந்து நீக்கி வைக்கும் மத்திய அரசின் நிதி மசோதா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். நான்கு தொகுப்பாக சுருக்கப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.
ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று சட்டத்தை ரத்து செய்து, ஊழியர்களிடம் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக மாநில அரசுகளுக்கு திருப்பி தர, நிதி மேலாளர்களுக்கு ஆணை வழங்க வேண்டும். 1995ம் ஆண்டு வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ன.