/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குடிநீர் பணி இழுத்தடிப்பு ஒப்பந்ததாரர் மீது குற்றச்சாட்டு
/
குடிநீர் பணி இழுத்தடிப்பு ஒப்பந்ததாரர் மீது குற்றச்சாட்டு
குடிநீர் பணி இழுத்தடிப்பு ஒப்பந்ததாரர் மீது குற்றச்சாட்டு
குடிநீர் பணி இழுத்தடிப்பு ஒப்பந்ததாரர் மீது குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 27, 2024 03:33 AM
பள்ளிப்பாளையம்: குடிநீர் பணியை விரைந்து முடிக்காமல், ஒப்பந்ததாரர் இழுத்தடித்து வருவதால், பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதியில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் நகராட்சியில், அனைத்து வார்டுகளிலும் குடிநீர் பணி நடந்து வருகிறது. இப்பணி மிகவும் தொய்வு நிலையில் நடப்பதால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர் என, கடந்த, 19ல் நடந்த நகர்மன்ற கூட்டத்தில், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் தெரிவித்தனர். மேலும், இந்த குடிநீர் திட்டப்பணி தேவை இல்லாதது. தற்போதுள்ள குடிநீர் திட்டம் வழியாக, சீரான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. புதிய குடிநீர் திட்டப்பணியால் சாலை சேதமடைந்துள்ளது என, குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
இதுகுறித்து, நகராட்சி தலைவர் செல்வராஜிடம் கேட்டபோது, ''பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதியில், 17.77 கோடி ரூபாயில் வீடுதோறும் குடிநீர் இணைப்பு பணி, ஓராண்டுக்கு முன் துவங்கப்பட்டது. திருப்பூரை சேர்ந்தவர் ஒப்பந்தம் எடுத்துள்ளார். 60 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளன. குடிநீர் பணிக்காக சாலையில் பள்ளம் தோண்டியதால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர். ஒப்பந்ததாரர் மிகவும் அலட்சியமாக உள்ளார். புதிதாக சாலை அமைக்க, 10 கோடி ரூபாய் நிதி வந்துள்ளது. ஆனால், குடிநீர் பணி முடியாததால், புதிய சாலை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.