/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நைனாமலை சாலைப்பணிக்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு: தலைமை பொறியாளர் ஆய்வு
/
நைனாமலை சாலைப்பணிக்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு: தலைமை பொறியாளர் ஆய்வு
நைனாமலை சாலைப்பணிக்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு: தலைமை பொறியாளர் ஆய்வு
நைனாமலை சாலைப்பணிக்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு: தலைமை பொறியாளர் ஆய்வு
ADDED : அக் 23, 2024 07:20 AM
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, 1,000 ஆண்டு பழமைவாய்ந்த நைனாமலை வருதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில், 2,700 அடி உயரத்தில் உள்ளதால், 3,600 படிக்கட்டுகளில் சென்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யும் நிலை உள்ளது. இதனால், கோவிலுக்கு செல்ல மலை உச்சி வரை சாலை அமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து, சில ஆண்டுகளுக்கு முன் சுற்றுலாத்துறை மூலம் மண் சாலை அமைக்க, 13.06 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணி முடிந்துள்ளது. இந்நிலையில், நேற்று நடந்த அரசு விழாவில், மலைக்கு செல்ல தார்ச்சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறை மூலம், 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதையடுத்து, புதிய சாலை அமைக்கப்பட உள்ள நைனாமலை வருதராஜ பெருமாள் கோவில் மண் சாலையையும், புதிதாக அமைக்கப்பட உள்ள தார்ச்சாலை அமைக்கும் பணியையும், நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சத்தியபிரகாஷ் ஆய்வு செய்து, கொண்டை ஊசி வளைவுகள், வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். சேலம் கோட்ட கண்காணிப்பு பொறியாளர் சசிக்குமார், நாமக்கல் கோட்ட பொறியாளர் திருகுணா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.