/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போக்குவரத்து நெரிசலை குறைக்க மாற்று ஏற்பாடு திட்ட அறிக்கை ஆர்.டி.ஓ.,விடம் ஒப்படைப்பு

ADDED : டிச 22, 2024 01:21 AM
போக்குவரத்து நெரிசலை குறைக்க மாற்று ஏற்பாடு
திட்ட அறிக்கை ஆர்.டி.ஓ.,விடம் ஒப்படைப்பு
பள்ளிப்பாளையம், டிச. 22-
பள்ளிப்பாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வாகனங்கள் சீராக செல்லவும், மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் திட்ட அறிக்கை திருச்செங்கோடு ஆர்.டி.ஓ.,விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் மேம்பாலம் பணி நடந்து வருகிறது. இதனால் காலை, மாலை நேரங்களில் தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளும், பொது மக்களும் மிகவும் அவதிப்படுகின்றனர்.
கடந்த 18 ம்தேதி, குமாரபாளையம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள், பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதி, பிரிவு சாலை, ஆர்.எஸ்., வழித்தடம், பாலம் சாலை, ஜீவாசெட் ஆகிய பகுதியில் நேரில் ஆய்வு செய்தனர். மேலும் வாகன ஓட்டிகளிடம் கருத்து கேட்டனர்.
இந்த ஆய்வின் அடிப்படையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பள்ளிப்பாளையத்தில் இருந்து திருச்செங்கோடு, நாமக்கல், ராசிபுரம், சேலம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள் ஆலாம்பாளையம் வழித்தடத்திலும், அங்கிருந்து வரும் வாகனங்கள் ஆர்.எஸ்., பேப்பர் மில் வழிதடத்திலும் செல்லும் வகையில் மாற்று ஏற்பாடு செய்து, இதன் அறிக்கையை திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., வுக்கு அனுப்பப்பட்டுள்ளது' என்றார்.