/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மஹேந்ரா இன்ஜி., கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
/
மஹேந்ரா இன்ஜி., கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
மஹேந்ரா இன்ஜி., கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
மஹேந்ரா இன்ஜி., கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ADDED : செப் 21, 2024 03:12 AM
நாமக்கல்: நாமக்கல், மஹேந்ரா பொறியியல் கல்லுாரியின் முன்னாள் மாண-வர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, கல்லுாரி தலைவர் பாரத்குமார் தலை-மையில், மகாத்மா காந்தி கலையரங்கில் நடந்தது. விழாவில் முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டு, தங்களின் அனுபவங்க-ளையும், கல்லுாரி நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர்.
மேலும், முன்னாள் மாணவர் அமைப்பானது, தற்போது பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது, தொழிற்சார்
திறன்களை மேம்படுத்த உதவி செய்வது, அவ்வப்போது அவர்க-ளுடன் கலந்துரையாடுவது மற்றும் உயர்தொழிற்
நிறுவனங்களில் அவர்களை பணியமர்த்த தேவையான முன்னேற்பாடுகளை செய்-வது என, முடிவு செய்யப்பட்டது.அனைவரும் ஒருங்கிணைந்து சமூக மறுமலர்ச்சி ஏற்படுத்த, இது போன்ற நிகழ்ச்சி உதவிபுரியும் என, பேசினர்.பின், இசை நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி செயல் இயக்குனர் சாம்சன் ரவீந்திரன், முதல்வர்கள் மஹேந்ரகவுடா, இளங்கோ,
செந்தில்குமார், புலமுதல்வர்கள் சண்முகம், நிர்மலா, ராஜவேல், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், முன்னாள் மாணவ,
மாண-வியர் கலந்து கொண்டனர்.