sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

செல்வம் தொழில்நுட்ப கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா

/

செல்வம் தொழில்நுட்ப கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா

செல்வம் தொழில்நுட்ப கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா

செல்வம் தொழில்நுட்ப கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா


ADDED : ஜன 01, 2025 01:37 AM

Google News

ADDED : ஜன 01, 2025 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செல்வம் தொழில்நுட்ப கல்லுாரியில்

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா

நாமக்கல், ஜன. 1-

நாமக்கல் செல்வம் தொழில்நுட்ப கல்லுாரியில், 'நட்பே இணைந்திடு' என்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. நடிகர் பாலா, விக்கி சிவா ஆகியோர், பல குரலில் பேசி அசத்தினர். மேலும், கருத்து நிறைந்த தகவல்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். செல்வம் கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான செல்வராஜ் கலந்துகொண்டார். அறங்காவலர் ஜெயம் செல்வராஜ் தலைமை வகித்தார். செயலாளர் கவித்ரா நந்தினி, செல்வம் தொழில்நுட்ப கல்லுாரியின் செயல் இயக்குனர் கார்த்திக், முதல்வர் ஜெகன் ஆகியோர் பேசினர். எம்.பி.ஏ., துறைத்தலைவர் ஜெயசீலன் வரவேற்றார்.

விழாவில் கலந்துகொண்ட, கல்லுாரி முன்னாள் மாணவர்கள், தங்களது பழைய நினைவுகளை பேசி மகிழ்ந்தனர். தொடர்ந்து, முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் தேர்தல் நடத்தி தலைவர், செயலாளர், பொருளாளர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மெக்கானிக்கல் துறைத்தலைவர் செல்வராஜ் நன்றி தெரிவித்தார். 1,500க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

விளை நிலம் பொது ஏலம் விடுவதை கண்டித்து

ஹிந்து சமய அறநிலையத்துறை ஆபீஸ் முற்றுகை

நாமக்கல், ஜன. 1-

ப.வேலுார் தாலுகா, பொத்தனுார் கிராமத்தில், 12.42 ஏக்கர் நிலம், 100 ஆண்டுகளுக்கு மேல் சிலரின் அனுபவத்தில் இன்று வரை இருந்து வருகிறது.

மேலும், இந்த நிலத்தின் ஆவண உரிமை மற்றும் அனுபவ உரிமை, இதுவரை அவர்களிடம் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த, 1967ல் இருந்து, 1997 வரை சுத்த கிரயம் பெற்றுள்ள ஆவணங்களும் வைத்துள்ளனர். இது தொடர்பாக, மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தற்போது உபயோகத்தில் உள்ளவர்கள் தரப்பிற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலம், பொத்தனுார் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமானது என்றாலும், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லை.

பல ஆண்டுகளாக அனுபவத்தில் உள்ள நிலத்தை, ஹிந்து சமய அறநிலையத்துறையினர், பொது ஏலம் விடுவதாக அறிவித்தனர். அதற்கு, அனுபவத்தில் உள்ள விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பொது ஏலத்தில் கலந்துகொள்ள, நாமக்கல்லில் உள்ள ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்திற்கு வந்தனர்.

ஆனால், அவர்கள் ஆக்கிரமிப்புக்காரர்கள் எனக்கூறி, பொது ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கவில்லை. அதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள், அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us