/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அமாவாசை, கவுரி நோன்பு எதிரொலி ரூ.9 லட்சத்துக்கு காய்கறி விற்பனை
/
அமாவாசை, கவுரி நோன்பு எதிரொலி ரூ.9 லட்சத்துக்கு காய்கறி விற்பனை
அமாவாசை, கவுரி நோன்பு எதிரொலி ரூ.9 லட்சத்துக்கு காய்கறி விற்பனை
அமாவாசை, கவுரி நோன்பு எதிரொலி ரூ.9 லட்சத்துக்கு காய்கறி விற்பனை
ADDED : நவ 02, 2024 01:01 AM
ராசிபுரம், நவ. 2-
அமாவாசை, கவுரி நோன்பால், நேற்று ராசிபுரம் உழவர் சந்தையில், 9 லட்சம் ரூபாய்க்கு காய்கறி விற்பனையானது.
ராசிபுரம் உழவர் சந்தையில், கடந்த மாதம் கிலோ, 25 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி நேற்று, 38 ரூபாய்க்கு விற்றது. அதேபோல், நேற்று ஐப்பசி அமாவாசை, கவுரி நோன்பு என்பதால், வழக்கத்தை விட பொதுமக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. நேற்று, தக்காளி கிலோ, 38, கத்தரி, 50, வெண்டை, 30, புடலை, 32, பீர்க்கன்காய், 55, பாகல், 40, சுரைக்காய், 15, பச்சை மிளகாய், 25, சின்ன வெங்காயம், 50, பெரிய வெங்காயம், 60, முட்டைகோஸ், 28, கேரட், 60, பீன்ஸ், 130, பீட்ரூட், 36 ரூபாய்க்கு விற்பனையானது. வாழைப்பழம், 40, கொய்யா, 50, பப்பாளி, 20, தர்பூசணி, 20, சீத்தாப்பழம், 35, எலுமிச்சை, 60, விலாம்பழம், 40 ரூபாய்க்கும் விழ்பனையானது.
நேற்று ஒரே நாளில், 174 விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்க கொண்டு வந்திருந்தனர். 15,880 கிலோ காய்கறி, 5,830 கிலோ பழங்கள், 380 கிலோ பூக்கள் என மொத்தம், 22,090 கிலோ காய்கறி, பழங்கள் விற்பனையாகின. இதன் மொத்த மதிப்பு, 9.35 லட்சம் ரூபாய் ஆகும். 4,765 பேர் உழவர் சந்தைக்கு வந்து பொருட்களை வாங்கி சென்றனர்.
ராசிபுரம் உழவர் சந்தையில் சாதாரண நாட்களில் சராசரியாக, 6 லட்சம் முதல், 8 லட்சம் ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகும். நேற்று ஐப்பசி அமாவாசை, கவுரி நோன்பு என்பதால், 9.35 லட்சம் ரூபாய்க்கு காய்கறி, கனிகள், பூக்கள் விற்பனையாகின.