/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆம்புலன்ஸ் டிரைவர், மருத்துவ உதவியாளர் பணி
/
ஆம்புலன்ஸ் டிரைவர், மருத்துவ உதவியாளர் பணி
ADDED : செப் 04, 2025 02:14 AM
நாமக்கல், '108' அவசரகால ஆம்புலன்சில் டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு, வரும், 6ல், நாமக்கல்லில் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
தமிழகத்தில் உள்ள, 108, 102, 155377 ஆம்புலன்ஸ் வாகனங்களில், டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம், வரும், 6 காலை, 9:00 முதல், மாலை, 3:00 மணி வரை, நாமக்கல் -- மோகனுார் சாலையில் உள்ள, பழைய அரசு மருத்துவ கல்லுாரி வளாகத்தில் அமைந்துள்ள, '108' அவசரகால ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் நடக்கிறது.
டிரைவருக்கான அடிப்படை தகுதிகள்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேர்முக தேர்வு அன்று, 24 வயதுக்கு மேலும், 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரும் கலந்துகொள்ளலாம். உயரம், 162.5 சென்டி மீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும். இலகுரக வாகன டிரைவிங் லைசென்ஸ் எடுத்து, குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் மற்றும் பேஜ் பெற்று, குறைந்தபட்சம் ஓராண்டும் நிறைவு பெற்றிருக்க
வேண்டும்.
தகுதி உடைய விண்ணப்பதாரர்கள், தங்களுடைய கல்வி, டிரைவிங் லைசென்ஸ் மற்றும் அனுபவம் தொடர்பான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சரி பார்ப்பதற்காக கொண்டு வர வேண்டும். மாத சம்பளம், 21,120 ரூபாய் மொத்த சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, மனிதவளத்துறை நேர்கானல், கண்பார்வை, மருத்துவம் சம்பந்தப்பட்ட தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, 10 நாட்கள் முழுமையான வகுப்பறை பயிற்சி அளிக்கப்பட்டு பணி வழங்கப்படும்.
மருத்துவ உதவியாளர்களுக்கான அடிப்படை தகுதி: பி.எஸ்சி., நர்சிங் அல்லது ஜி.என்.எம்.,-ஏ.என்.எம்.,-டி.எம்.எல்.டி., (பிளஸ் 2 வகுப்பிற்கு பின் இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைப் சயின்ஸ், பி.எஸ்சி., ஜூவாலஜி, பாட்டனி, பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி, இவைகளில் ஏதேனும் ஒன்று முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு தேர்வு அன்று, 19-க்கு குறையாமலும், 30க்கு மிகாமலும் இருக்க வேண்டும். மாத சம்பளம், 21,320 ரூபாய் மொத்தமாக வழங்கப்படும். எழுத்து தேர்வு, மருத்துவ நேர்முகம், உடற்கூறியல், முதலுதவி, அடிப்படை நர்சிங் பணி தொடர்பான, மற்றும் மனிதவளத்துறை நேர்முக தேர்வுகள்
நடத்தப்படும்.
முகாமில் தேர்வு தேர்வு செய்யப்படுபவர்கள், 50 நாட்கள் முழுமையான வகுப்பறை பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள். விபரங்களுக்கு, 89259-40969 என்ற மொபைல் போனில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.