/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெப்படையில் ஆண்கள் மட்டும் கலந்துகொண்ட அம்மன் திருவிழா
/
வெப்படையில் ஆண்கள் மட்டும் கலந்துகொண்ட அம்மன் திருவிழா
வெப்படையில் ஆண்கள் மட்டும் கலந்துகொண்ட அம்மன் திருவிழா
வெப்படையில் ஆண்கள் மட்டும் கலந்துகொண்ட அம்மன் திருவிழா
ADDED : செப் 04, 2025 02:15 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை பகுதியில் ஆண்கள் மட்டுமே கலந்துகொண்ட அம்மன் திருவிழா நடந்தது.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே வெப்படையில், 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்திற்கு சொந்தமான தேவாதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவிழா, கடந்த, 1ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரண்டாம் நாளான, நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு புத்து பூஜை நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான, நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு சக்தி அழைக்கப்பட்டது. இதையடுத்து, 9:00 மணிக்கு சுடுவான் பூஜையும், 11:00 மணிக்கு பெரும் பூஜையும் நடந்தது. மதியம், புற்று மண்ணால் செய்யப்பட்ட அம்மனுக்கு வழிபாடு நடத்தி, 42 ஆடுகள் பலியிட்டு அனைவருக்கும் அசைவ உணவு வழங்கப்பட்டது.
இதில், 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமூகத்தை சேர்ந்த ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பெண்களுக்கு அனுமதி கிடையாது. பள்ளிப்பாளையம், ஈரோடு, திருச்செங்கோடு, நாமக்கல், சேலம், ஆத்துார், சித்தோடு, பாலக்காடு, சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 2,000-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.
இதுகுறித்து, விழாக்குழுவினர் கூறியதாவது: கடந்த, 30 ஆண்டுகளுக்கு பின் திருவிழா நடக்கிறது. இதில் ஆண்கள் மட்டுமே கலந்துகொள்வர். விழா முடிந்தவுடன், புற்று மண்ணால் செய்யப்பட்ட தேவாதி அம்மன் சிலையை, காவிரி ஆற்றில் கரைக்கப்படும். பூஜையில் மீதியாகும் பொருட்கள், கறி உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும், மிகப்பெரிய குழி தோண்டப்பட்டு குழியில் போடப்பட்டு மூடப்படும். முன்னோர்களின் வழிகாட்டுதல்படி, இந்த திருவிழா
நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.